<$BlogRSDURL$>

Monday, January 02, 2006

பிரெட் கட்லெட் 

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 6
கோஸ் துருவியது - 1/2கப்
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)
கேரட் துருவியது - 1/4கப்
கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது ) கான்ப்ளவர் மாவு - 1/4 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

துருவிய காய்கறிகளை குக்கரில் 1விசில் வரும்வரை வைத்து எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்விழுது,கொத்துமல்லி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெதுவெதுப்பான நீரில் நனைத்து எடுத்து காய்கறிகலவையை நடுவில் வைத்து மூடி உருண்டையாக செய்து கொள்ளவும். கான்ப்ளவர் மாவை நீர்விட்டி கரைத்துக்கொண்டு அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து பிறகு ரவையில் புரட்டி எடுத்துவிரும்பிய வடிவில் செய்து கொள்ளவும். நான் ஸ்டிக் தோசைக்கல்லில் கட்லெட்டை இருபுறமும் எண்ணைவிட்டு பொன்னிறமாக வெந்ததும் சூடாக தக்காளிசாஸ் சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

நன்றி : தமிழோவியம்

This page is powered by Blogger. Isn't yours?