<$BlogRSDURL$>

Sunday, January 08, 2006

பிரெட் கிரிஸ்பி சான்ட்விச் 

பிரெட் கிரிஸ்பி சான்ட்விச்

தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் - 6
தயிர் - 1கப்
கோஸ் - 100கிராம்
கேரட் - 1
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
ஜீரகப்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்( வறுத்தது)
மிளகுபொடி - 1 டீஸ்பூன்
சாட்மசாலா - 1/2 டீஸ்பூன்
வெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை : ஒரு அகலமான பாத்திரத்தில் தயிரை சேர்த்து அத்துடன் காய்கறிகளை மெல்லியதாக அரிந்து சேர்த்து பிறகு அதில் ரவை, கிரீம், ஜீரகப்பொடி, உப்பு, மிளகுபொடி, சாட்மசாலா யாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அதன் மேல் இக்கலவையை 2டேபிள்ஸ்பூன் எடுத்துநன்கு பரப்பவும். பிறகு நான் ஸ்டிக் கடாயில் 1டீஸ்பூன் வெண்ணை அல்லது நெய் விட்டி பிரெட்டை இரு புறமும் நன்றாக டோஸ்ட் செய்து எடுத்து தக்காளி சாஸ் சேர்த்து பரிமாற சூப்பர் டேஸ்டு என்று பாராட்டை பெற்றுத்தரும்.

மிக்ஸ்டு ஸ்பெரளட் பாஸ்கட் சாட்

தேவையான பொருட்கள்

பாஸ்கட் தயாரிக்க :

மைதா - 2கப்
ஓமம் - 1டீஸ்பூன்
வெண்ணை- 2டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது
எண்ணை - பொரித்தெடுக்க

(Filling) பில்லிங் தயாரிக்க :

முளைகட்டிய பயறு - 1/4 கப்
வேகவைத்ததுமுளைகட்டிய பீன்ஸ் - 1/4 கப் வேகவைத்ததுமுளைகட்டிய கடலை - 1/4 கப் வேகவைத்ததுவெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கியது
தக்காளி - 1/2 கப் பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி - 1/4கப் பொடியாக நறுக்கியது
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
ஜீரகப்பொடி- 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கொத்துமல்லி,புதினா சட்னி - 4டேபிள்ஸ்பூன்
பேரீட்ச்சை சிரப் - 4டேபிள்ஸ்பூன்
உருளைகிழங்கு சிப்ஸ் - 100கிராம்

செய்முறை :

மைதாவை சலித்து எடுத்து உப்பு,வெண்ணை,ஓமம் சேர்த்து சிறிது நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வீட்டில் உள்ள குழிவான கிண்ணம் அல்லது கட்டோரியை எடித்துக்கொண்டு மாவை மேல்பகுதியில் கையாலேயே பரத்திவிடவும். கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் கிண்ணங்களை எண்ணையில் மெதுவாக போடவும். மாவு வெந்தது கிண்ணத்தைவிட்டு வெளியில் வந்ததும் கிண்ணத்தை மெதுவாக எடுத்து விடவும். கிண்ணத்தின் வடிவில் கரகரப்பான பாஸ்கட் தயார் ஆகிவிடும். இதேபோல் எல்லா மாவையும் செய்து வைத்துக்கொள்ளவும்.பொரித்துஎடுத்த பாஸ்கட்டில் கீழே கூறுவது போல் பில்லிங் செய்யவும்.
உருளைகிழங்கு சிப்ஸை நொறுக்கி வைத்துக்கொள்ளவும். முளைக்கட்டிய தானியங்களுகளுடன் உப்பு,சட்னி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பாஸ்கட்டில் முதலில் இந்த கலவையை 4ஸ்பூன் போட்டு அதன்மேல் 2 டீஸ்பூன் வெங்காயம்,தக்காளி தூவவும்.இஅதற்குமேல் சிப்ஸ் பொடித்ததை தூவி தயிர் 3டீஸ்பூன்,பேரிட்ச்சை சிரப் 1/2 டீஸ்பூன் விட்டு சாட்மசாலா,ஜீரகப்பொடி,பொடிதாக அரிந்த கொத்துமல்லி தூவி தட்டில் அழகாக வைக்கவும். இந்த முறையில் பாஸ்கட் சாட் வீட்டிலேயே தயாரித்து கொடுத்துப்பாருங்கள். குழந்தைகள் உங்களிடம் சாட்கடைக்கு போகலாம் என்று கூறவேமாட்டார்கள்.பணமும் மிச்சம்.ஆரோக்கியமான சாட் வீட்டிலேயே செய்த திருப்தியும் ஏற்படும்.

நன்றி : தமிழோவியம்

This page is powered by Blogger. Isn't yours?