Thursday, January 19, 2006
அரிசி நூடுல்ஸ் பாயசம் - கேழ்வரகு பக்கோடா
அரிசி நூடுல்ஸ் பாயசம்
தேவையானவை
புழுங்கல் அரிசி - 1 கப் / கோதுமை மாவு - அரை கப் / பால் - 1 லிட்டர் வெல்லம் - கால் கப் / ஏலக்காய் - 10 முந்திரிப்பருப்பு - 10 / கசகசா - கால் கப் நெய் - 1/4 கப் /தேங்காய் - அரை மூடி / உப்பு - தேவைக்கு
செய்முறை
புழுங்கல் அரிசியை நன்றாக சிவக்க வறுத்து மாவாக அரைக்கவும். இதில் கோதுமை மாவு, உப்பு, நெய் விட்டு தண்ணீர் தெளித்து கெட்டி-மாவாகப் பிசையவும். பிறகு ஓமப்பொடி அச்சில் போட்டு நூடுல்ஸ் போல பிழிந்து கொள்ளவும். இதை சற்று நேரம் காற்றுபடும்படி வைத்து காயவைத்துக் கொள்ளவும்.
கசகசாவை இரண்டு மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். வாணலியில் டால்டாவை ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுக்கவும். பிறகு அரிசி நூடுல்ஸ் போட்டு நிதானமான தீயில் வதக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் போதிய தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள கசகசா விழுதைக் கொட்டி, வெல்லமும் சேர்த்து கரைய விடவும். தேங்காயைத் துருவி லேசாக நெய்யில் வறுக்கவும். வெல்லம் கரைந்து கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள தேங்காயத் துருவல், காய்ச்சிய பால், ஏலக்காய், முந்திரிப் பருப்பு ஆகியவைகளைச் சேர்க்கவும். சிட்டிகை உப்பைப் போட்டு இறக்கவும். வெகு ருசியான சத்தான அரிசி பாயசம் ரெடி.
கேழ்வரகு பக்கோடா
தேவையானவை
கேழ்வரகு மாவு - 1/2 கிலோ / அரிசி மாவு - 100 கிராம் / கடலைப் பருப்பு - 150 கிராம் (ஊற வைத்தது) / முந்திரி - 100 கிராம்/ கடலை மாவு - 50 கிராம்
இஞ்சி - சிறு துண்டு / பச்சை மிளகாய், கொத்தமல்லி - தேவையான அளவு பெரிய வெங்காயம் - 2 / உப்பு - போதிய அளவு / பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் / சமையல் சோடா - 1 ஸ்பூன் எண்ணெய் - பொறிக்க
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கடலை மாவு, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, பெருங்காயப் பொடி, சமையல் சோடா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, அகலமான பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, பிசைந்து கொள்ளவும். பிறகு ஊற வைத்த 150 கிராம் கடலைப் பருப்பையும், பக்கோடாவிற்குப் பிசைவது போல் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அது மிதமாகக் காய்ந்தவுடன், கையால் மாவை உதிர்த்து விடுவதுபோல் போட்டு, எண்ணெயில் வேக வைக்கவும். அடுப்பை நிதானமாக எ¡¢ய விடவேண்டும். நன்றாக வெந்தவுடன், எண்ணெயை வடித்து, பக்கோடாவை எடுக்கவும். கேழ்வரகு பக்கோடா இப்பொழுது மணக்க மணக்க ரெடி.
நன்றி : தமிழோவியம்