<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

கோவா சீஸ் ஜாமூன் 


தேவையானவை:

கோவா (பாலை சுண்டக் காய்ச்சி எடுத்தது) ஒரு கப், சீஸ் (துருவியது) அரை கப், மைதா மாவு முக்கால் கப், சர்க்கரை 5 கப், சோடாமாவு ஒரு சிட்டிகை, கடலை எண்ணெய் இரண்டரை கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.

செய்முறை:

பால்கோவாவை நன்கு உதிர்த்துத் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். சீஸையும் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் மைதா மாவையும் சேர்த்து நன்கு பிசையவும். ஜாமூன் உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, கெட்டியாக இல்லாமல் ஜீரா தயார் செய்யவும். ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஜாமூன் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஜீராவில் போடவும். செய்வதற்கும் சுலபம். சாப்பிடுவதற்கும் புதுச் சுவையாக இருக்கும்.
சாதாரண ஜாமூன், ஜீராவில் சிறிது கரையும். இந்த ஜாமூன் கரையாமல், உருண்டையாக அப்படியே இருக்கிறது. சீஸ் போடுவதால் மாவுக் கலவை சற்று இளகுவது போலிருந்தால், மைதாவை கொஞ்சம் ஜாஸ்தி சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

This page is powered by Blogger. Isn't yours?