<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

முருங்கைக் கீரை தொக்கு 


தேவையானவை:

முருங்கை கீரை 2 கப், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, புளி நெல்லிக்காய் அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் (விருப்பப்பட்டால்) துளியளவு.

செய்முறை:

முருங்கைக் கீரையை சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பிறகு, அந்த எண்ணெயிலேயே, கீரையை போட்டு வதக்கி எடுக்கவும். மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். தயிர் சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு அருமையான சைட்டிஷ் இது. முருங்கை கீரை பிடிக்காத பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் விடாமல் பொடி போலவும் அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், சிறிது தண்ணீர் விட்டு அரைத்தால்தான், எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள சுவையான தொக்கு கிடைக்கும்.

This page is powered by Blogger. Isn't yours?