<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

வடுமாங்காய் - நாக்கு ஊறுதுங்கோ 

அரைக்காமல் கொள்ளாமல் செய்யக் கூடிய, ஒரு வருடத்துக்கு வைத்துக்கொள்வது போல ஒரு சூப்பரான வடுமாங்காய் ஊறுகாய் இருக்கிறது.

ஐந்து கப் உருண்டை மாவடுவை கழுவித் துடைத்து, அரைமணி நேரம் நிழலில் உலரவிடுங்கள். ஒரு கப் கல் உப்பை எடுத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். (தூள் உப்பாக இருந்தால் முக்கால் கப் போதும்). மாவடுவுடன் பொடித்த உப்பைச் சேர்த்து பிசறி, ஒரு ஜாடியில் போட்டு மூடிவையுங்கள். மறுநாள் நன்கு குலுக்கிவிடுங்கள். மூன்றாம் நாள், வடு தண்ணீர் விட்டிருக்கும். மீண்டும் நன்கு கிளறி மூடிவையுங்கள்.

நான்காம் நாள், உப்பு நீரிலிருந்து வடுக்களை எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில், போட்டுவைத்துவிட்டு, ஒரு கரண்டியால் உப்பு நீரை நன்கு கலக்குங்கள். (கரையாமல் இருக்கும் உப்பும் கரைந்துவிடும்). ஒரு மெல்லிய, சுத்தமான துணியால் வடிகட்டுங்கள். அந்த நீரில் அரை கப் மிளகாய்தூளையும் கால் கப் கடுகுத்தூளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு, அதனுடன் வடுவையும் சேர்த்துக் கலந்து ஒரு ஜாடியில் போட்டு, மூடிவையுங்கள். அவ்வளவுதான்!

ஊறுகாய் எவ்வளவு நாளானாலும் அப்படியே இருக்கும். மேலே ஏடு படியாது. இந்த முறைக்கு விளக் கெண்ணெய், மஞ்சள்தூள் தேவை இல்லை.’’

This page is powered by Blogger. Isn't yours?