<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

பருப்பு பிரதமன் 

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப், அரிசி ரவை 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது) 1 கப், முதல் தேங்காய்ப்பால் (கெட்டியானது) 1 கப், இரண்டாம் தேங்காய்ப் பால் 1 கப்,\ ஏலக் காய்தூள் 1 டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

பருப்பை வாசனை வரும்வரை வறுத்து, வேகவிடுங்கள். அதனுடன் ரவையையும் சேர்த்து வேகவிடுங்கள். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, வெந்த பருப்பில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இரண்டாவது தேங்காய்ப்பாலை சேருங்கள். 5 நிமிடம் கொதிக்கவிட்டு, முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். ஏலக்காய்தூள், நெய் சேர்த்து பரிமாறுங்கள். கேரள மாநிலத்தவரின் ஃபேவரிட் பாயசங்களில் இதுவும் ஒன்று.


This page is powered by Blogger. Isn't yours?