<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

இலை அடை - பூரணக் கொழுக்கட்டை..?? 




தேவையானவை:

பச்சரிசி மாவு 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் 1 டேபிள்ஸ்பூன்.

பூரணத்துக்கு: தேங்காய் துருவல் (அழுத்தி அளந்தது) அரை கப், வெல்லம் (பொடித்தது) அரை கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன்.

செய்முறை :

பச்சரிசி மாவை, உப்பு, கொதிக்கும் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டுங்கள். வடிகட்டிய வெல்லப்பாகில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஒரு வாழையிலையை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். ஒவ்வொரு இலைத் துண்டிலும் சிறிது மாவு வைத்து, மெல்லிய அடையாக தட்டி, நடுவில் பூரணம் வைத்து இலையோடு மடித்து, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.
ஒருமுறை சாப்பிட்டால் அந்த மணமும் ருசியும் உங்கள் நாவிலும் மனசிலும் தங்கிவிடும்.

This page is powered by Blogger. Isn't yours?