Monday, April 10, 2006
நேந்திரம் சிப்ஸ்

தேவையானவை:
நேந்திரங்காய் 2, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையானது, தேங்காய் எண்ணெய் பொரிக்கத் தேவையானது.
செய்முறை:
நேந்திரங்காய்களை வாழைப்பழம் உரிப்பது போல் உரித்து தோலை நீக்குங்கள். மஞ்சள்தூள், உப்பை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து நேந்திரங்காய்களை நேரடியாக எண்ணெயில் சீவி விடுங்கள். நன்கு வெந்து எடுக்கும் சமயம் உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரை சிறிது எண்ணெயில் தெளித்து, படபடவென்று பொரிந்து அடங்கியதும் சிப்ஸை அரித்தெடுங்கள்.