<$BlogRSDURL$>

Wednesday, April 19, 2006

ஸ்டஃப்ட் தால் 


தேவையானவை:

கோதுமை மாவு 2 கப், சோள மாவு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலைப்பருப்பு 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் கால் கப் அல்லது எண்ணெய் தேவையான அளவு, வெந்நீர் தேவையான அளவு.


செய்முறை:

பச்சை மிளகாயை விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வேக வைத்த கடலைப்பருப்பு, உப்பு, லேசாக சுட வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசையவும். கடைசியில் லேசாக எண்ணெய் விட்டு பிசைந்து அரை மணி நேரம் அதன் மீது ஒரு பாத்திரமோ அல்லது மெலிதான துணியையோ போட்டு மூடி வைக்கவும்.

பிறகு பிசைந்து வைத்த மாவை திரட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெயை மாவைச் சுற்றி லேசாக விட்டு அடுப்பை சின்னதாக வைத்து ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் போட்டு மீண்டும் லேசாக நெய்யோ அல்லது எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இது குழந்தைகள் விரும்பக்கூடிய வித்தியாசமான சப்பாத்தியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரிக்காய் ராய்தா சரியான தேர்வாக இருக்கும்.

கடலைப்பருப்பு பிடிக்காதவர்கள் பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளலாம். ஆனால், குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேக வையுங்கள்.

This page is powered by Blogger. Isn't yours?