Wednesday, April 19, 2006
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பட்டுவா

தேவையானவை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1 கிலோ, அரிசி மாவு 6 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் விதைகள் 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை அரை கப், தண்ணீர் கால் கப், டால்டா அல்லது நெய் தேவையான அளவு, ரோஸ் எஸன்ஸ் சில துளிகள்.
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி, அப்படியே உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டி, அவற்றில் ஏலக்காய் விதைகளைப் பதித்து வைக்கவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். ரோஸ் எஸன்ஸ் விட்டு கலக்கவும்.
வாணலியில் டால்டா விட்டு காய்ந்த உடன், தட்டி வைத்தவற்றைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அவற்றை சர்க்கரை பாகில் போட்டு சிறிது ஊறியவுடன் எடுத்து பரிமாறவும்.