<$BlogRSDURL$>

Friday, May 12, 2006

ஐஸ்க்ரீம் வகைகள் 

இதோ கோடை காலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென்று என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர் கள். உங்கள் யோசனையில் நிச்சயமாக ஐஸ்க்ரீம்தான் முதலில் நினைவிற்கு வந்திருக்கும். இதோ உங்களுக்காகவே நீங்கள் வீட்டிலே சுலபமாக செய்யக்கூடிய சில சிம்பிள் ஐஸ்க்ரீம் ரெஸிபிகளைத் தருகிறார் ‘மெனுராணி’ செல்லம்.
ஐஸ்க்ரீம் செய்யப் போவதற்கு முன் இந்த டிப்ஸை முதலில் படியுங்கள். பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஐஸ்க்ரீம் செய்ய ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் ஆகியவை கிடைக்கும். இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்தாலே போதும்... எந்த ஃப்ளேவர் ஐஸ்க்ரீமாக இருந்தாலும் சாஃப்டாக வரும்.


பைனாப்பிள் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள்_4 ஸ்லைஸ்கள்பால்பவுடர்_1 கப்தண்ணீர்_2 கப்சர்க்கரை_1 கப்ப்ரெஷ் க்ரீம்_1 கப்ஜி.எம்.எஸ்._லு தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டிபைனாப்பிள் எசென்ஸ் _1 தேக்கரண்டிமஞ்சள் ஃபுட் கலர் _ சிட்டிகையளவு

செய்முறை:

சிறிதளவு தண்ணீரில் பைனாப்பிள் ஸ்லைஸ்களை போட்டுக் கொதிக்க வையுங்கள். வேகவைத்த பைனாப்பிள் ஸ்லைஸ்களை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பால் பவுடருடன் தண்ணீர் கலந்து பிறகு க்ரீம், எசென்ஸ், பைனாப்பிள் துண்டுகள், சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். கடைசியாக ஜி.எம்.எஸ்., ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்துவிட, ஐஸ்க்ரீம் கலவை தயார்!

இதை ஃப்ரீசரில் செட் செய்து இறுகியதும் சுவைத்து சாப்பிடலாம்!

காஃபி பிரலைன் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்:

பால் பவுடர் _ 1 கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்ஜி.எம்.எஸ். _ அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர் _ 1 தேக்கரண்டிக்ரீம் _ 1 கப்டிகாஷன் அல்லதுஇன்ஸ்டெண்ட் காஃபி பொடி(வெந்நீரில் கலந்தது) _ அரை கப்காஃபி எசென்ஸ் _ 2 தேக்கரண்டி

செய்முறை:

காஃபியே பிடிக்காதவர்களுக்கும் இந்த காஃபி ஐஸ்கிரீம் பிடிக்கும். வீட்டிலேயே பில்டர் காபி தயாரிப்பவர்கள் டிகாஷனை உபயோகப்படுத்தலாம். வீட்டில் டிகாஷன் செய்யாதவர்கள், எந்த இன்ஸ்டண்ட் பொடியிருந்தாலும் அதை சிறிதளவு வெந்நீரில் கலந்து கொண்டு பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், தண்ணீர், சர்க்கரை, கிரீம் முதலியவைகளைக் கலக்கவும். பின் காஃபி டிகாஷனைச் சேர்க்கவும். (சூடாக இருக்கக் கூடாது) டிகாஷன் போடுபவர்கள், எஸென்ஸ் போட அவசியமில்லை. கலர், மணம், ருசி எல்லாம் அதிலேயே அடங்கி விடும். எல்லாம் கலந்ததும் கடைசியாக ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்து இந்தக் கலவையை கலக்கவும். ஒரு வாயகன்ற அதிக உயரமில்லாத அலுமினிய டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் செட் செய்யவும்.

ப்ரலைன் செய்முறை :பாதாம் _ 1 கப்சர்க்கரை _ 1 கப்தட்டில் தடவ _ வெண் ணெய் சிறிதளவு

செய்முறை:

பாதாமையும் சர்க்கரையையும் சேர்ந்து, ஒரு வாணலியில் சூடாக்கவும். கிளறக் கிளற சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும். இது பாதாமுடன் சேர்த்து ஒரு கலவை போல் இருக் கும். கலர் பொன்னிற மானவுடன் வாசனை வரும். உடனே வாணலியிலிருந்து எடுத்து வெண்ணை தடவிய தட்டில் பரத்தி ஆற விடுங்கள். பிறகு தட்டி லிருந்து எடுத்துக் கொட்டி கரகர வென்று பொடிக்கவும்.
இதை தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம் மேலேயும் இதைத் தூவலாம். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் தூவலாம். தேவைப் படும்போது ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளலாம். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் நமுத்து விடும். சில மணி நேரங்கள் வரைதான் இது ‘கிரிஸ்ப்’ ஆக இருக்கும்.

ராஸ்பெர்ரி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

தண்ணீர்_2 கப்பால்பவுடர்_1 கப் சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்ராஸ்ப்பெர்ரி எசென்ஸ் _ 1 தேக்கரண்டிரோஸ் ஃபுட் கலர் _ சில துளிகள்ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி

செய்முறை:

தண்ணீரும், பால் பவுடரும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் சர்க்கரை, கிரீம், எசென்ஸ், கலர் முதலியவை சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையும் சேர்த்து பிரிட்ஜில் செட் செய்யவும்.

டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :

பால்பவுடர் _ 1 கப்ஆரஞ்சு ஷ§ஸ் _ அரை கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்டூட்டிஃப்ரூட்டிஎஸென்ஸ் _ 1தேக்கரண்டிரோஸ் அல்லது ஆரஞ்சு கலர்_சில துளிகள்.ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி

செய்முறை :

வழக்கம் போல் ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் கலவையைக் கலந்து வைக்கவும். பால், தண்ணீர் இரண்டையும் கலந்து பின்பு கிரீம், எஸென்ஸ், (டூட்டி ஃப்ரூட்டி எஸென்ஸ் கிடைக்கவில்லை என்றால்
1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் எசென்ஸ் சேர்க்கலாம்.) கலர், ஆரஞ்சு ஷ§ஸ் இவற்றைச் சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையையும் சேர்க்கவும்.
இவற்றுடன், 50 கிராம் முந்திரி, 50 கிராம் செர்ரி, 50 கிராம் டூட்டி ஃப்ரூட்டி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கலவையுடன் சேர்க்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கிரீம் செய்தால், கலவை கொஞ்சம் கெட்டியான பிறகு சேர்க்கவும்.

முதலிலேயே சேர்த்தால் பருப்புக் கலவை பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

பால் பவுடர் _ 1 கப்சர்க்கரை _1 கப்க்ரீம்_1 கப்தண்ணீர்_2 கப்பட்டர் ஸ்காட்ச் எஸென்ஸ் _2 தேக்கரண்டி மஞ்சள் கலர்_சிறிதளவு (கேக் அலங்கரிக்க உபயோகிக்கும் கலர்)ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி
செய்முறை :

பால் பவுடரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பால் ரெடியானவுடன் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவை, கிரீம் கலர், எஸென்ஸ், சர்க்கரை முதலானவை சேர்த்துக் கலவையை டிரேயில் கொட்டி, ஃப்ரிட்ஜில் செட் செய்யுங்கள். பரிமாறும் முன் பட்டர் ஸ்காட்ச் எஸன்ஸ் கலந்து பரிமாறவும்.
பட்டர் ஸ்காட்ச் செய்யும் முறை: சுமார் இரண்டு கப் சர்க்கரையை ஒரு கடாயில் போட்டு, கைவிடாமல் (தண்ணீரோ, எண்ணையோ சேர்க்காமல்) கிளற வேண்டும். சர்க்கரை இளகி பொன்னிறமாக தளதளவென்று கொப்புளம் வரும் நிலையில், நிறைய வெண்ணை (சுமார் 1 மேஜைக்கரண்டி) தடவிய தட்டில், சுடச்சுட கொட்டி விடவும்.

இப்போது உருக்கிய சர்க்கரை ஒரு பலகை போல் எடுக்க வரும். அதை நொறுக்கினால், பளபளவென்று கண்ணாடித்தூள் போல் நொறுங்கி விடும். இதுவே பட்டர் ஸ்காட்ச். இதைத் தயார் செய்த ஐஸ்கிரீம் மேல் தூவிவிட, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவைக்க தயார்!

This page is powered by Blogger. Isn't yours?