Thursday, January 19, 2006
அரிசி நூடுல்ஸ் பாயசம் - கேழ்வரகு பக்கோடா
அரிசி நூடுல்ஸ் பாயசம்
தேவையானவை
புழுங்கல் அரிசி - 1 கப் / கோதுமை மாவு - அரை கப் / பால் - 1 லிட்டர் வெல்லம் - கால் கப் / ஏலக்காய் - 10 முந்திரிப்பருப்பு - 10 / கசகசா - கால் கப் நெய் - 1/4 கப் /தேங்காய் - அரை மூடி / உப்பு - தேவைக்கு
செய்முறை
புழுங்கல் அரிசியை நன்றாக சிவக்க வறுத்து மாவாக அரைக்கவும். இதில் கோதுமை மாவு, உப்பு, நெய் விட்டு தண்ணீர் தெளித்து கெட்டி-மாவாகப் பிசையவும். பிறகு ஓமப்பொடி அச்சில் போட்டு நூடுல்ஸ் போல பிழிந்து கொள்ளவும். இதை சற்று நேரம் காற்றுபடும்படி வைத்து காயவைத்துக் கொள்ளவும்.
கசகசாவை இரண்டு மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். வாணலியில் டால்டாவை ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுக்கவும். பிறகு அரிசி நூடுல்ஸ் போட்டு நிதானமான தீயில் வதக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் போதிய தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள கசகசா விழுதைக் கொட்டி, வெல்லமும் சேர்த்து கரைய விடவும். தேங்காயைத் துருவி லேசாக நெய்யில் வறுக்கவும். வெல்லம் கரைந்து கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள தேங்காயத் துருவல், காய்ச்சிய பால், ஏலக்காய், முந்திரிப் பருப்பு ஆகியவைகளைச் சேர்க்கவும். சிட்டிகை உப்பைப் போட்டு இறக்கவும். வெகு ருசியான சத்தான அரிசி பாயசம் ரெடி.
கேழ்வரகு பக்கோடா
தேவையானவை
கேழ்வரகு மாவு - 1/2 கிலோ / அரிசி மாவு - 100 கிராம் / கடலைப் பருப்பு - 150 கிராம் (ஊற வைத்தது) / முந்திரி - 100 கிராம்/ கடலை மாவு - 50 கிராம்
இஞ்சி - சிறு துண்டு / பச்சை மிளகாய், கொத்தமல்லி - தேவையான அளவு பெரிய வெங்காயம் - 2 / உப்பு - போதிய அளவு / பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் / சமையல் சோடா - 1 ஸ்பூன் எண்ணெய் - பொறிக்க
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கடலை மாவு, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, பெருங்காயப் பொடி, சமையல் சோடா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, அகலமான பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, பிசைந்து கொள்ளவும். பிறகு ஊற வைத்த 150 கிராம் கடலைப் பருப்பையும், பக்கோடாவிற்குப் பிசைவது போல் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அது மிதமாகக் காய்ந்தவுடன், கையால் மாவை உதிர்த்து விடுவதுபோல் போட்டு, எண்ணெயில் வேக வைக்கவும். அடுப்பை நிதானமாக எ¡¢ய விடவேண்டும். நன்றாக வெந்தவுடன், எண்ணெயை வடித்து, பக்கோடாவை எடுக்கவும். கேழ்வரகு பக்கோடா இப்பொழுது மணக்க மணக்க ரெடி.
நன்றி : தமிழோவியம்

Saturday, January 14, 2006
அவள் விகடன் - ஜனவரி 14
ரவா சர்க்கரை பொங்கல்
தேவையானவை:
ரவை - 1 கப், நெய் 1 கப், வெல்லம் - இரண்டரை கப், ஏலக்காய் 5, தண்ணீர் - 3 கப், முந்திரிப்பருப்பு - கால் கப். ,
செய்முறை:
அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி, முதலில் முந்திரிப்பருப்பை வறுத் தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ரவையைப் போட்டு, சிவக்க வறுக்கவும். 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையில் ஊற்றி கிளறவும்.
இப்போது வெல்லத்தை தூளாக்கி, சிறிது தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி, கெட்டியான பாகாகக் காய்ச்சவும். இதை ரவையில் விட்டு, நன்றாகக் கிளறி, இதனுடன் ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி போட்டு கிளறி இறக்கவும். இது ஒரு வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல்.சுவை தூக்கலாக வேண்டும் என்பவர்கள், இதில் சிறிது மில்க் மெய்டையும் கலந்து கொள்ளலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொடித்தூவல்
தேவையானவை:
தோல் சீவி சற்று பெரியதாக அரிந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு 2 கப், தாளிக்க எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயப் பொடி தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.
பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 5. எல்லாப் பொருட்களையும் சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து, சற்று கரகரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து, பின் வேக வைத்த கிழங்கை போடவும். சற்று வதங்கியதும் பொடியை தூவி, இறக்கவும். உங்கள் வீட்டின் பொங்கல் விருந்தில் முதலிடம் பிடிக்கும் இந்த பொடிதூவல்! சாதாரணமாக பொரியல் செய்து சாப்பிடுவதைவிட, இது போல் பொடி தூவி செய்யும் பொரியல், இனிப்பு கலந்த காரச் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.
கசகசா ஆல்மண்ட் பூரி
தேவையானவை:
கசகசா 2 கப், பாதாம்பருப்பு அரை கப், பச்சரிசி மாவு 1 கப், சீனி 4 கப், குங்குமப்பூ அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 25 கிராம், கிஸ்மிஸ் சிறிது, கோதுமை மாவு 4 கப், நெய் (நல்ல நெய்) 4 கப், பால் சிறிதளவு.
செய்முறை:
கசகசாவை ஊற வைக்கவும். பாதாம்பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு தோலை நீக்கவும். கசகசாவையும் பாதாம்பருப்பையும் கல் உரல் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் கசகசா, பாதாம்பருப்பு அரைத்த விழுதையும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் சிறு துண்டுகளாக்கவும். அத்துடன் குங்குமப் பூவையும் சேர்த்து அரைத்து, கிளறிய விழுதுடன் கலக்கவும். இதுதான் பூரணம்.
கோதுமை மாவை தண்ணீர் விட்டு, பாலும் சேர்த்து நன்றாக மெதுவாக வரும் வரை பிசையவும். நன்றாக அடித்துப் பிசைந்த கோதுமை மாவை அப்பளம் போட்டு, சிறிது நெய், அரிசி மாவு கலந்து, தடவி, சுருட்டி, துண்டுகளாக நறுக்கி, அப்பளம் போல் போடவும்.
அப்பளத்தின் மேல் கசகசா பூரணத்தைப் பரப்பி, மேலே மற்றொரு அப்பளத்தை வைத்து நன்றாகச் சேர்த்து சோமாசிக் கரண்டியால் ஓரங்களை நறுக்கவும். பின் தேவையான அளவு நெய்யை காயவைத்து பொரித்தெடுக்கவும். சுவை நிறைந்த பூரி ரெடி.
கசகசா பிடிக்காதவர்கள், வெறும் பாதாம், முந்திரியை மட்டும் வைத்து செய்யலாம். நெய் பிடிக்காதவர்கள், எண்ணெயில் பூரிகளைப் பொரிக்கலாம்
Sunday, January 08, 2006
பிரெட் கிரிஸ்பி சான்ட்விச்
பிரெட் கிரிஸ்பி சான்ட்விச்
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 6
தயிர் - 1கப்
கோஸ் - 100கிராம்
கேரட் - 1
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
ஜீரகப்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்( வறுத்தது)
மிளகுபொடி - 1 டீஸ்பூன்
சாட்மசாலா - 1/2 டீஸ்பூன்
வெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை : ஒரு அகலமான பாத்திரத்தில் தயிரை சேர்த்து அத்துடன் காய்கறிகளை மெல்லியதாக அரிந்து சேர்த்து பிறகு அதில் ரவை, கிரீம், ஜீரகப்பொடி, உப்பு, மிளகுபொடி, சாட்மசாலா யாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அதன் மேல் இக்கலவையை 2டேபிள்ஸ்பூன் எடுத்துநன்கு பரப்பவும். பிறகு நான் ஸ்டிக் கடாயில் 1டீஸ்பூன் வெண்ணை அல்லது நெய் விட்டி பிரெட்டை இரு புறமும் நன்றாக டோஸ்ட் செய்து எடுத்து தக்காளி சாஸ் சேர்த்து பரிமாற சூப்பர் டேஸ்டு என்று பாராட்டை பெற்றுத்தரும்.
மிக்ஸ்டு ஸ்பெரளட் பாஸ்கட் சாட்
தேவையான பொருட்கள்
பாஸ்கட் தயாரிக்க :
மைதா - 2கப்
ஓமம் - 1டீஸ்பூன்
வெண்ணை- 2டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது
எண்ணை - பொரித்தெடுக்க
(Filling) பில்லிங் தயாரிக்க :
முளைகட்டிய பயறு - 1/4 கப்
வேகவைத்ததுமுளைகட்டிய பீன்ஸ் - 1/4 கப் வேகவைத்ததுமுளைகட்டிய கடலை - 1/4 கப் வேகவைத்ததுவெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கியது
தக்காளி - 1/2 கப் பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி - 1/4கப் பொடியாக நறுக்கியது
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
ஜீரகப்பொடி- 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கொத்துமல்லி,புதினா சட்னி - 4டேபிள்ஸ்பூன்
பேரீட்ச்சை சிரப் - 4டேபிள்ஸ்பூன்
உருளைகிழங்கு சிப்ஸ் - 100கிராம்
செய்முறை :
மைதாவை சலித்து எடுத்து உப்பு,வெண்ணை,ஓமம் சேர்த்து சிறிது நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வீட்டில் உள்ள குழிவான கிண்ணம் அல்லது கட்டோரியை எடித்துக்கொண்டு மாவை மேல்பகுதியில் கையாலேயே பரத்திவிடவும். கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் கிண்ணங்களை எண்ணையில் மெதுவாக போடவும். மாவு வெந்தது கிண்ணத்தைவிட்டு வெளியில் வந்ததும் கிண்ணத்தை மெதுவாக எடுத்து விடவும். கிண்ணத்தின் வடிவில் கரகரப்பான பாஸ்கட் தயார் ஆகிவிடும். இதேபோல் எல்லா மாவையும் செய்து வைத்துக்கொள்ளவும்.பொரித்துஎடுத்த பாஸ்கட்டில் கீழே கூறுவது போல் பில்லிங் செய்யவும்.
உருளைகிழங்கு சிப்ஸை நொறுக்கி வைத்துக்கொள்ளவும். முளைக்கட்டிய தானியங்களுகளுடன் உப்பு,சட்னி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பாஸ்கட்டில் முதலில் இந்த கலவையை 4ஸ்பூன் போட்டு அதன்மேல் 2 டீஸ்பூன் வெங்காயம்,தக்காளி தூவவும்.இஅதற்குமேல் சிப்ஸ் பொடித்ததை தூவி தயிர் 3டீஸ்பூன்,பேரிட்ச்சை சிரப் 1/2 டீஸ்பூன் விட்டு சாட்மசாலா,ஜீரகப்பொடி,பொடிதாக அரிந்த கொத்துமல்லி தூவி தட்டில் அழகாக வைக்கவும். இந்த முறையில் பாஸ்கட் சாட் வீட்டிலேயே தயாரித்து கொடுத்துப்பாருங்கள். குழந்தைகள் உங்களிடம் சாட்கடைக்கு போகலாம் என்று கூறவேமாட்டார்கள்.பணமும் மிச்சம்.ஆரோக்கியமான சாட் வீட்டிலேயே செய்த திருப்தியும் ஏற்படும்.

Friday, January 06, 2006
சைனீஸ் சாட் - நியூட்ரி டோஸ்ட்
சைனீஸ் சாட்
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - 150 கிராம்
கேரட் - 2
குடமிளகாய் - 1
கோஸ் - 100கிராம்
ஸ்பிரிங் ஆனியன் - 2
சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளிசாஸ் - 4 டீஸ்பூன்
வறுத்தவேர்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
மிளகுபொடி - 1/2 டீஸ்பூன்
உருளைகிழங்குப ¢ங்கர் சிப்ஸ் - 100கிராம்
கொத்துமல்லி - 1/4கப் பொடியாக அரிந்தது
சமையல் எண்ணை - 100கிராம்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - 2டீஸ்பூன்
செய்முறை :
கடாயில் எண்ணைவிட்டு காய்ந்ததும்(சமையல் எண்ணை) நூடுல்ஸை நொறுக்கி எடுத்து பொரித்து எண்ணை வடித்து வைக்கவும். கேரட்,கோஸ்,குடமிளகாய் இவற்றை மெல்லியதாக நீளவாட்டில் அரிந்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு சூடானதும் காய்கறிகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இத்துடன் மிளகுபொடி,சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவைக்கவும். கிண்ணங்களில் வறுத்த நூடுல்ஸ் மற்றும் 4 உருளைகிழங்கு சிப்ஸ் ,2டீஸ்பூன்பொடித்தவேர்கடலை போட்டு அதன்மேல் வதங்கிய காய்கறிகளை பரவலாக தூவவும். இதன் மேல் பொடிதாக அரிந்த கொத்துமல்லி,ஸ்பிரிங் ஆனியன்தாள்களைத் தூவி சிறிது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாற மிகவும் சுவையாக இருக்கும். இதையே மொத்தமாகவும் கலந்து எடுத்தும் பரிமாறலாம். குழந்தைகள் மிகவும் விரும்பும் சாட் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
நியூட்ரி டோஸ்ட்
தேவையானபொருட்கள்
பிரெட் துண்டுகள் - 6
நட்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 3 டீ ஸ்பூன்
வெண்ணை - 4 டீ ஸ்பூன்
பேரீட்ச்சை சிரப் - 4 டீ ஸ்பூன்
செய்முறை :
சாதரணமாக சாண்ட்விச் செய்யும்போது காய்கறி வைத்து தயாரிப்பது வழக்கம். இதிலிருந்து மாறுபட்டு இந்தமுறையில் தயாரித்து தரலாம். பிரெட்துண்டுகளில் முதலில் ஒருபக்கம் 1/2டீஸ்பூன் தேன் தடவி அதன் மேல் சிறிது நட்ஸ் தூவி வைக்கவும். மற்றொரு துண்டில் 1/2டீஸ்பூன் வெண்ணைதடவி அதன் மேல் 1/2டீஸ்பூன் பேரீட்ச்சை சிரப்பை தடவி தேன் தடவிய துண்டின்மேல் வைத்து மூடி பிறகு லேசாக டோஸ்டு செய்து குழந்தைகளுக்கு தர சத்தாண சாட்விச் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத்தரும்.

Tuesday, January 03, 2006
வாழைக்காய் வடை- மிளகு தோசை
வாழைக்காய் வடை
தேவையானவை
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைப் பயறு - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைக்காய்களை தோல் நீக்கிவிட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊறவைத்து பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வாழைக்காயை நன்கு மசித்து கலந்துவிடுவும். இவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். புதுமையான வாழைக்காய் வடை ரெடி!
மிளகு தோசை
தேவையானவை
புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு
வெந்தயம் - சிறிதளவு
நெய் - 50 கிராம்
மிளகு - 10
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பை தனியாக ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து வைக்கவும். பின்னர் இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை போனறவற்றை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து மாவுடன் கலந்து மஞ்சள் பொடி போட்டு கரைத்து மூடி வைக்கவும். எட்டு மணி நேரத்துக்குப் பிறகு, பொங்கி வந்த மாவில் மிளகைப் பொடித்துப் போட்டு கலந்து தோசை வார்க்கவும். தீபாவளி அன்று பலவிதமான பட்சணங்களையும் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரணத்திற்கு மிகவும் நல்லது இந்த மிளகு தோசை. தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது தக்காளி தொக்குடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி : தமிழோவியம்
Monday, January 02, 2006
பிரெட் கட்லெட்
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 6
கோஸ் துருவியது - 1/2கப்
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)
கேரட் துருவியது - 1/4கப்
கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது ) கான்ப்ளவர் மாவு - 1/4 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
துருவிய காய்கறிகளை குக்கரில் 1விசில் வரும்வரை வைத்து எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்விழுது,கொத்துமல்லி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெதுவெதுப்பான நீரில் நனைத்து எடுத்து காய்கறிகலவையை நடுவில் வைத்து மூடி உருண்டையாக செய்து கொள்ளவும். கான்ப்ளவர் மாவை நீர்விட்டி கரைத்துக்கொண்டு அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து பிறகு ரவையில் புரட்டி எடுத்துவிரும்பிய வடிவில் செய்து கொள்ளவும். நான் ஸ்டிக் தோசைக்கல்லில் கட்லெட்டை இருபுறமும் எண்ணைவிட்டு பொன்னிறமாக வெந்ததும் சூடாக தக்காளிசாஸ் சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.