<$BlogRSDURL$>

Friday, May 12, 2006

ஐஸ்க்ரீம் வகைகள் 

இதோ கோடை காலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென்று என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர் கள். உங்கள் யோசனையில் நிச்சயமாக ஐஸ்க்ரீம்தான் முதலில் நினைவிற்கு வந்திருக்கும். இதோ உங்களுக்காகவே நீங்கள் வீட்டிலே சுலபமாக செய்யக்கூடிய சில சிம்பிள் ஐஸ்க்ரீம் ரெஸிபிகளைத் தருகிறார் ‘மெனுராணி’ செல்லம்.
ஐஸ்க்ரீம் செய்யப் போவதற்கு முன் இந்த டிப்ஸை முதலில் படியுங்கள். பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஐஸ்க்ரீம் செய்ய ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் ஆகியவை கிடைக்கும். இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்தாலே போதும்... எந்த ஃப்ளேவர் ஐஸ்க்ரீமாக இருந்தாலும் சாஃப்டாக வரும்.


பைனாப்பிள் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள்_4 ஸ்லைஸ்கள்பால்பவுடர்_1 கப்தண்ணீர்_2 கப்சர்க்கரை_1 கப்ப்ரெஷ் க்ரீம்_1 கப்ஜி.எம்.எஸ்._லு தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டிபைனாப்பிள் எசென்ஸ் _1 தேக்கரண்டிமஞ்சள் ஃபுட் கலர் _ சிட்டிகையளவு

செய்முறை:

சிறிதளவு தண்ணீரில் பைனாப்பிள் ஸ்லைஸ்களை போட்டுக் கொதிக்க வையுங்கள். வேகவைத்த பைனாப்பிள் ஸ்லைஸ்களை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பால் பவுடருடன் தண்ணீர் கலந்து பிறகு க்ரீம், எசென்ஸ், பைனாப்பிள் துண்டுகள், சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். கடைசியாக ஜி.எம்.எஸ்., ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்துவிட, ஐஸ்க்ரீம் கலவை தயார்!

இதை ஃப்ரீசரில் செட் செய்து இறுகியதும் சுவைத்து சாப்பிடலாம்!

காஃபி பிரலைன் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்:

பால் பவுடர் _ 1 கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்ஜி.எம்.எஸ். _ அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர் _ 1 தேக்கரண்டிக்ரீம் _ 1 கப்டிகாஷன் அல்லதுஇன்ஸ்டெண்ட் காஃபி பொடி(வெந்நீரில் கலந்தது) _ அரை கப்காஃபி எசென்ஸ் _ 2 தேக்கரண்டி

செய்முறை:

காஃபியே பிடிக்காதவர்களுக்கும் இந்த காஃபி ஐஸ்கிரீம் பிடிக்கும். வீட்டிலேயே பில்டர் காபி தயாரிப்பவர்கள் டிகாஷனை உபயோகப்படுத்தலாம். வீட்டில் டிகாஷன் செய்யாதவர்கள், எந்த இன்ஸ்டண்ட் பொடியிருந்தாலும் அதை சிறிதளவு வெந்நீரில் கலந்து கொண்டு பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், தண்ணீர், சர்க்கரை, கிரீம் முதலியவைகளைக் கலக்கவும். பின் காஃபி டிகாஷனைச் சேர்க்கவும். (சூடாக இருக்கக் கூடாது) டிகாஷன் போடுபவர்கள், எஸென்ஸ் போட அவசியமில்லை. கலர், மணம், ருசி எல்லாம் அதிலேயே அடங்கி விடும். எல்லாம் கலந்ததும் கடைசியாக ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்து இந்தக் கலவையை கலக்கவும். ஒரு வாயகன்ற அதிக உயரமில்லாத அலுமினிய டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் செட் செய்யவும்.

ப்ரலைன் செய்முறை :பாதாம் _ 1 கப்சர்க்கரை _ 1 கப்தட்டில் தடவ _ வெண் ணெய் சிறிதளவு

செய்முறை:

பாதாமையும் சர்க்கரையையும் சேர்ந்து, ஒரு வாணலியில் சூடாக்கவும். கிளறக் கிளற சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும். இது பாதாமுடன் சேர்த்து ஒரு கலவை போல் இருக் கும். கலர் பொன்னிற மானவுடன் வாசனை வரும். உடனே வாணலியிலிருந்து எடுத்து வெண்ணை தடவிய தட்டில் பரத்தி ஆற விடுங்கள். பிறகு தட்டி லிருந்து எடுத்துக் கொட்டி கரகர வென்று பொடிக்கவும்.
இதை தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம் மேலேயும் இதைத் தூவலாம். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் தூவலாம். தேவைப் படும்போது ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளலாம். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் நமுத்து விடும். சில மணி நேரங்கள் வரைதான் இது ‘கிரிஸ்ப்’ ஆக இருக்கும்.

ராஸ்பெர்ரி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

தண்ணீர்_2 கப்பால்பவுடர்_1 கப் சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்ராஸ்ப்பெர்ரி எசென்ஸ் _ 1 தேக்கரண்டிரோஸ் ஃபுட் கலர் _ சில துளிகள்ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி

செய்முறை:

தண்ணீரும், பால் பவுடரும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் சர்க்கரை, கிரீம், எசென்ஸ், கலர் முதலியவை சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையும் சேர்த்து பிரிட்ஜில் செட் செய்யவும்.

டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :

பால்பவுடர் _ 1 கப்ஆரஞ்சு ஷ§ஸ் _ அரை கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்டூட்டிஃப்ரூட்டிஎஸென்ஸ் _ 1தேக்கரண்டிரோஸ் அல்லது ஆரஞ்சு கலர்_சில துளிகள்.ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி

செய்முறை :

வழக்கம் போல் ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் கலவையைக் கலந்து வைக்கவும். பால், தண்ணீர் இரண்டையும் கலந்து பின்பு கிரீம், எஸென்ஸ், (டூட்டி ஃப்ரூட்டி எஸென்ஸ் கிடைக்கவில்லை என்றால்
1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் எசென்ஸ் சேர்க்கலாம்.) கலர், ஆரஞ்சு ஷ§ஸ் இவற்றைச் சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையையும் சேர்க்கவும்.
இவற்றுடன், 50 கிராம் முந்திரி, 50 கிராம் செர்ரி, 50 கிராம் டூட்டி ஃப்ரூட்டி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கலவையுடன் சேர்க்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கிரீம் செய்தால், கலவை கொஞ்சம் கெட்டியான பிறகு சேர்க்கவும்.

முதலிலேயே சேர்த்தால் பருப்புக் கலவை பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

பால் பவுடர் _ 1 கப்சர்க்கரை _1 கப்க்ரீம்_1 கப்தண்ணீர்_2 கப்பட்டர் ஸ்காட்ச் எஸென்ஸ் _2 தேக்கரண்டி மஞ்சள் கலர்_சிறிதளவு (கேக் அலங்கரிக்க உபயோகிக்கும் கலர்)ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி
செய்முறை :

பால் பவுடரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பால் ரெடியானவுடன் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவை, கிரீம் கலர், எஸென்ஸ், சர்க்கரை முதலானவை சேர்த்துக் கலவையை டிரேயில் கொட்டி, ஃப்ரிட்ஜில் செட் செய்யுங்கள். பரிமாறும் முன் பட்டர் ஸ்காட்ச் எஸன்ஸ் கலந்து பரிமாறவும்.
பட்டர் ஸ்காட்ச் செய்யும் முறை: சுமார் இரண்டு கப் சர்க்கரையை ஒரு கடாயில் போட்டு, கைவிடாமல் (தண்ணீரோ, எண்ணையோ சேர்க்காமல்) கிளற வேண்டும். சர்க்கரை இளகி பொன்னிறமாக தளதளவென்று கொப்புளம் வரும் நிலையில், நிறைய வெண்ணை (சுமார் 1 மேஜைக்கரண்டி) தடவிய தட்டில், சுடச்சுட கொட்டி விடவும்.

இப்போது உருக்கிய சர்க்கரை ஒரு பலகை போல் எடுக்க வரும். அதை நொறுக்கினால், பளபளவென்று கண்ணாடித்தூள் போல் நொறுங்கி விடும். இதுவே பட்டர் ஸ்காட்ச். இதைத் தயார் செய்த ஐஸ்கிரீம் மேல் தூவிவிட, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவைக்க தயார்!

உணவு போல் மனசு 


‘‘பச்சை மிளகாயைக் கடிச்சிட்டியா? இப்படி ‘சுள்’னு எரிஞ்சி விழறியே!’’ என்பது நாம் சாதாரணமாகப் பேசும் உரையாடல்தான். மிளகாயைக் கடித்தால், பேச்சு ‘சுள்’ளென்று வருமா என்பது எந்த அளவுக்கு உண்மையோ... தெரியவில்லை! ஆனால், நம் குணத்தையும் எண்ண ஓட்டத்தையும் மாற்றுகிற சக்தி உணவுக்கு உண்டு’’ என்கிறார், ஊட்டச் சத்து நிபுணரான ஷைனி சந்திரன்.

ஷைனி சொல்லும் உணவு மந்திரங்கள் சில இங்கே...

‘‘மூளையில் செரடோனின், டோபமின், நார்எபிநெஃப்ரைன் என்கிற மூன்று ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்’ இருக்கின்றன. இவைதான் தகவல்களை உருவாக்குவது, முக்கியமான தகவல்களை அனுப்புவது, அவற்றைப் பாதுகாப்பது... என்கிற மூன்று முக்கியமான வேலைகளையும் செய்கின்றன.எனவேதான் இவற்றுக்கு மூளையின் ‘ரசாயன தூதுவர்கள்’ (கெமிக்கல் மெசெஞ்சர்ஸ்) என்று பெயர். இந்த மூன்றும், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றன.
செரடோனின், நம்மை அமைதியாக, ரிலாக்ஸ்டாக வைத்திருக்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மற்ற இரண்டும் நம்மை உஷாராகவும் கவனத்துடனும் சக்தியுடனும் வைத்திருப்பதுடன், எந்த வேலை யையும் செய்வதற்குத் தூண்டு கோலாகவும் இருக்கின்றன.

இந்த நியூரோ டிரான்ஸ் மிட்டர்களைத் தூண்டும் ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என்று பார்ப்போம்.

செரடோனின், ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ நிறைந்த உணவுகளில் இருக்கிறது. அதாவது, கைக்குத்தல் அரிசி, சிவப்பு அவல், கேழ்வரகு, கம்பு, சோளம், முழு கோதுமை மாவு, பருப்புகள், ராஜ்மா, பச்சைப் பயறு, பட்டாணி, உருளைக்கிழங்கு, கோதுமை பிரெட் ஆகிய தானியங்கள் ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ அடங்கியவை. ரிலாக்ஸ்டாக இருக்க விரும்புகிறவர்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் நிரம்பிய உணவுகளை சேர்க்கும்போது மற்ற இரு டிரான்ஸ்மிட்டர்களான டோபமினும், நார்எபிநெஃப்ரைனும் தூண்டப்படுகின்றன. பாதாம், முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், மீன், முட்டை, முளை கட்டிய பயறுகள், பருப்புகள் ஆகியவை புரோட்டீன் உணவுகள். கால் சென்டர்கள் மற்றும் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவை இரவில் உட்கொண்டால், சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியும் (இரவில் நன்கு தூங்க விரும்பினால், புரோட்டீன் அடங்கிய உணவு களைத் தவிர்த்து, காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட் நிரம்பிய உணவை சாப்பிட வேண்டும்).
இவை தவிர, மற்ற உணவுப் பொருட்களும் மூளையுடன் தொடர்புடையவைதான். ஃப்ரெஷ் ஷான பழங்களிலும் காய்கறிகளிலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் எஸன்ஷியல் ஃபேட்டும்தான் மூளையின் செல்களை பாதுகாக்கின்றன. ‘நல்ல கொழுப்பு’ சத்து நிறைந்த நெய்மீன், கானாங்கெழுத்தி போன்ற மீன் உணவிலும், பாதாம், வால்நட், பரங்கி விதை, எள், வெந்தயம் போன்றவற்றிலும் இந்த எஸன்ஷியல் ஃபேட் அபரிமிதமாக உள்ளது.

மூளையின் நலத்துக்கு இன்னொரு முக்கியமான தேவை தண்ணீர். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும். ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம்பழச் சாறு, சர்க்கரை சேர்க் காத பழச்சாறுகள், காய்கறிச்சாறுகள், இளநீர், சூப், மோர், மூலிகை டீ, பச்சைத் தேயிலை டீ (பசுமையான தேயிலை இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ) போன்றவையும் உடலுக்கு புத்துணர்ச்சி தரக் கூடியவை. கோடைகாலத்தில் பானகம் அருந்தலாம்.

நிம்மதியையும் சுறுசுறுப்பையும் மட்டுமல்ல... எரிச்சலைக் கொடுக்கும் உணவு வகைகளும் உண்டு. கோலா பானங்கள், அடர் நிற சாக்லெட்டுகள், சத்து பானங்கள், காபி, டீ போன்றவற்றில் இருக்கும் காஃபைன் என்கிற பொருள், உடலில் இருக்கும் வைட்டமின் பி, சி, பொட்டாஷியம், கால்ஷியம், ஸின்க் போன்ற சத்துக்களை செயல் இழக்கச் செய்து விடும். இதனால், மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு, எரிச்சலும் பதற்றமும் ஏற் படுகிறது. எனவே, இந்த வகை பானங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரவில் இவற்றை அருந்தவே கூடாது.
மிட்டாய்கள், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், ஜாம், ஜெல்லிகள், இனிப்புகள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாகக் கூட்டி, பிறகு குறைக்கக் கூடியவை. எனவேதான் இவற்றை எடுத்துக் கொண்டதும் உற்சாகமாக இருப்பது போல தோன்றும். சிறிது நேரத்தில், சக்தி அனைத்தும் வடிந்து விட்டதைப் போன்ற களைப்பு ஏற்படுகிறது.

குறைந்த ஊட்டச் சத்துடன் கூடிய உணவு, மன அழுத்தம், சுற்றுப்புற சீர்கேடுகள், அதிக வேலைப் பளு, போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், எக்கச்சக்கமாக நொறுக்குத் தீனி போன்றவையும்கூட மூளையின் செயல்பாடுகளை பாதித்து, உடலைச் சோர்வடையச் செய்யும்.

சரியான இடைவெளியில் சாப்பிடும் பழக்கம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவும். பசியுடன் இருக்கையில் சர்க்கரையின் அளவில் மாறுபாடுகள் ஏற் படுவதால், மனநிலை மாறுகிறது. தேவை இல்லாத எரிச்சல், பதற்றம், கவலை, பயம், மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த மாதிரி நேரங்களில் உடனடியாக பழங் களையோ, காய்கறிகளையோ சாப் பிட்டால், வயிறோடு சேர்ந்து மனமும் குளிர்வதை உணர முடியும்’’ என்கிறார் ஷைனி.

முப்பது வகை கஞ்சி 

உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!

உணவுகளிலேயே மிக எளிமையான, ஆரோக்கியத்துக்கு மிக உகந்ததும் ஆன உணவு கஞ்சி. குறைந்த செலவில், வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம் என்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என்பதும் இதன் பிளஸ். கோடைக்காலத்தில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைத்து, உடலைக் குளிர்விக்கும் மகத்துவம் வாய்ந்த கஞ்சியில், 30 வகைகளை வழங்கியிருப்பவர்... ஏற்கெனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. சமையல் கலை நிபுணராகப் புதிய பொறுப்பை ஏற்றபோதிலும் அதில் அழகு + ஆரோக்கியக் குறிப்புகளையும் போனஸாகத் தந்திருக்கிறார். வெயிலுக்கு இதமாக கஞ்சியைப் பருகி, உடலையும் மனதையும் ‘குளு குளு’வென ஆக்குங்கள்.

சீஸனல் கஞ்சி

தேவையானவை:

மாங்காய் இஞ்சி 25 கிராம், பச்சை மிளகு 10 கிராம், பெருங்காயம் ஒரு சிட்டிகை, மோர் ஒரு கப், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழம் 1, மல்லித்தழை சிறிது.

செய்முறை:

மாங்காய் இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகை உதிர்த்துக்கொள்ளவும். கேழ்வரகுக் கூழை (பக்கம் 112ல் சொல்லப்பட்டுள்ள) முறைப்படி தயார் செய்துகொள்ளவும். அதில் ஒரு கப் எடுத்து, மோர், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். அத்துடன் துருவிய இஞ்சி, மிளகு சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து சாப்பிடவும். மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு சீஸனில் அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ், பால், பழக் கஞ்சி

தேவையானவை:

ஓட்ஸ் அரை கப், பால் ஒரு கப், பழங்கள் (ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் எல்லாம் கலந்தவை) அரை கப், சர்க்கரை ஒரு டீஸ்பூன்.
0 பாலை, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சிக்கொள்ளவும். பிறகு இறக்கி, அத்துடன் ஓட்ஸை சேர்த்துக் கலக்குங்கள். ஓட்ஸ் பாலில் நன்கு ஊறிவிடும். அதில் பழத்துண்டுகளை தூவிப் பரிமாறுங்கள். இது ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும். காலை உணவாகக் கூட இந்தக் கஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.

புழுங்கலரிசி லெமன் கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழம் அரை மூடி, இஞ்சிச் சாறு சிறிதளவு.

செய்முறை:

வேகவைத்த அரிசி ரவையுடன் இஞ்சிச் சாற்றையும் எலுமிச்சம்பழச் சாற்றையும் கலந்து உப்பு சேர்த்து பரிமாறவும். இந்தக் கஞ்சியை தினமும் காலையில் இரண்டு டம்ளர் சாப்பிட்டால், உடல் எடை குறையும்.

புழுங்கலரிசி ஓமக்கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, ஓமம் ஒரு டேபிள்ஸ்பூன், மோர் 2 கப்.

செய்முறை:

ரவையை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஓமத்தை நன்கு பொடித்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும், ஓமத்தண்ணீரை வண்டல் இல்லாமல் இறுத்துக்கொள்ளவும். இந்தத் தண்ணீரை வெந்த ரவையுடன் சேர்த்து, அத்துடன் மோர், உப்பு கலந்து அருந்தலாம். பசியெடுக்காதவர்களுக்கு நல்ல உணவும் மருந்துமாக இந்தக் கஞ்சி அமையும்.

புழுங்கலரிசி பூண்டுக்கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, பூண்டு 4 பல், மோர் 2 கப்.

செய்முறை:

அரிசி ரவையுடன் தண்ணீர் சேர்த்து, உரித்த பூண்டையும் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு, இந்தக் கஞ்சியில் நிறைய பூண்டு சேர்த்துக் கொடுத்தால், பால் நன்கு சுரக்கும்.

புழுங்கலரி இஞ்சி கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, இஞ்சி 25 கிராம், மோர் 2 கப்.

செய்முறை:

முன்பு சொன்னது போலவே ரவையை, தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். வேகவைத்த ரவையுடன், இஞ்சிச் சாறு, மோர், உப்பு கலந்து சாப்பிடலாம். சைனஸ், ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு வாய்க்கு இதமாக இருக்கும் இந்தக் கஞ்சி.

கறிவேப்பிலை கஞ்சி

தேவையானவை:
புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி.

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு மூடவும். சில நிமிஷங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாகி இருக்கும். கறிவேப்பிலையை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்தத் தண்ணீரில் ரவையை வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும், உப்பு, மோர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு என்று விருப்பமானதை கலந்து அருந்தலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

பொட்டுக்கடலை கஞ்சி

தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப், பால் ஒரு கப், சர்க்கரை தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் அல்லது மிஷினில் நன்கு அரைத்து, சலித்துக்கொள்ளவும். இந்த மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, நன்கு கொதிக்கும் நீரை கொஞ்சம் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, பொட்டுக்கடலைக் கஞ்சியில் பால் சேர்க்காமல் கொஞ்சம் தண்ணீராகக் காய்ச்சிக் கொடுக்கலாம். பால் அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கும் இதே போல் கொடுக்கலாம். புரோட்டீன் சத்து நிறைந்தது இந்தக் கஞ்சி.

ராகி மால்ட்

தேவையானவை:

கேழ்வரகு 5 கப், சர்க்கரை தேவையான அளவு, ஏலக்காய் (தோல் நீக்கிய பருப்பு மட்டும்) சிறிது, கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சிறிது.

செய்முறை:

முதல்நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து, ஊறவைக்கவும். மறுநாள் காலையில், நீரை வடித்துவிட்டு, கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்துவைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளை விட்டு வந்திருக்கும். முளைகட்டிய இந்தக் கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு உலர்த்தவும். நன்கு காய்ந்ததும், அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வறுக்கவும். (வாணலி சூடானதும் போட்டு, சில விநாடிகள் வறுத்தால் போதும். இல்லையெனில் தீய்ந்துவிடும்).
இதை மிஷினில் கொடுத்து நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, மெல்லிய ஒரு துணியில் போட்டு சலித்துக்கொள்ளவும் (இதற்கு ‘வஸ்திரகாயம்’ என்று பெயர்). சலித்தெடுத்த மாவுடன் பொடித்த ஏலம், கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ, பொடித்த சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துவைத்துக்கொள்ளவும். இதுதான் ‘இன்ஸ்டன்ட் ராகிமால்ட்’ பவுடர்.

சூடான பால் ஒரு கப் எடுத்து, அதில் இந்த ராகிமால்ட் பவுடரை ஒரு டீஸ்பூன் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிரவைத்தும் குடிக்கலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பானம் இது.

கேழ்வரகுக் கஞ்சி

தேவையானவை:

கேழ்வரகு மாவு அரை கப், உப்பு தேவையான அளவு, மோர் 2 கப்.

செய்முறை:

கேழ்வரகு மாவை, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கையால் கரைத்து, அடுப்பில் சிறு தீயில் வைத்து கிளறுங்கள். கட்டிபடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், மாவு வெந்துவிடும். சிறிது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் இருக்கவேண்டும். அந்தப் பதத்தில் இறக்கிவிடவும். ஆறியதும், இந்தக் களியில் சிறிது எடுத்து, மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் குடிக்கலாம். இந்தக் கஞ்சிக்கு, ஊறுகாய், சின்ன வெங்காயம் அல்லது காரமில்லாத பிஞ்சு பச்சை மிளகாய் சரியான ஜோடி. காலையில் இரண்டு டம்ளர் நிறைய கேழ்வரகு கஞ்சி குடித்தால், வேறு டானிக்கே வேண்டாம்.

பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி

தேவையானவை:

பச்சரிசி நொய் கால் கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் ஒரு கப், துருவிய பச்சைக் காய்கறிகள் (கேரட், வெள்ளரி, வெங்காயம், வாழைத்தண்டு போன்றவை) தலா ஒரு டேபிள்ஸ்பூன், மோர் அரை கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

அரிசி நொய்யை, தண்ணீருடன் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும் (குக்கரில் வேண்டாம்). நன்கு வெந்ததும் இறக்கி, ஆறவைத்து அத்துடன் மோர், உப்பு சேர்த்து, துருவிய காய்கறிகள் மற்றும் மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

நீராகாரக் கஞ்சி

தேவையானவை:

பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

ஜவ்வரிசி லெமன் கஞ்சி

தேவையானவை:

பெரிய (மாவு) ஜவ்வரிசி 2 டீஸ்பூன், தண்ணீர் 1 கப், உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழம் அரை மூடி.

செய்முறை:

முதல்நாள் இரவே ஜவ்வரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். மறுநாள் இதை அடுப்பில் வைத்துக் காய்ச்ச, கூழ் மாதிரி வரும். ஆறியதும், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஸ்பூனால் சாப்பிடலாம் அல்லது தேவையான மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

ஓட்ஸ் தக்காளி கஞ்சி

தேவையானவை:

ஓட்ஸ் கால் கப், தக்காளி (பெரியது) 2, உப்பு ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு சிட்டிகை.

செய்முறை:

தக்காளியைக் கழுவி, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டுங்கள். சிறிது தண்ணீரை சூடாக்கி, அதில் ஓட்ஸைப் போட்டால், சில விநாடிகளில் வெந்து, தண்ணீரை இழுத்துக்கொள்ளும். அதோடு, வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தலாம். உப்பு, உறைப்புடன் கூடிய சுவையான கஞ்சி இது.

அவல் கஞ்சி

தேவையானவை:

அவல் அரை கப், பால் ஒரு கப், சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி, அதில் அவலைச் சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு சூடாகப் பரிமாறவும். ஸ்பூன் போட்டு சாப்பிடும் பக்குவத்தில் இது இருக்கும். இதையே இன்னும் சிறிது பால், தண்ணீர் சேர்த்தால் குடிக்கும் பதத்தில் இருக்கும்.

கோதுமை ரவை கஞ்சி


தேவையானவை:

கோதுமை ரவை அரை கப், தண்ணீர் ஒரு கப், (விருப்பப்பட்டால்) பொடியாக துருவிய பீன்ஸ் சிறிதளவு, ஆய்ந்த வெந்தயக் கீரை சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்கவைத்து, கோதுமை ரவையைச் சேர்க்கவும். அத்துடன் வெந்தயக்கீரை, துருவிய பீன்ஸையும் சேர்க்கவும். சில நிமிடங்களிலேயே ரவை வெந்துவிடும். இத்துடன் உப்பு சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமையான காலை உணவு இது. சர்க்கரை இல்லாதவர்களும் இந்தக் கஞ்சியில் அரை கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி மீந்து போனால், அதை சிறு துண்டுகளாக்கவும். ஒரு கப் பாலை 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டு ஊறவைத்து, சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பர் ‘வீட் சீரியல்’ இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

கலவை கஞ்சி


தேவையானவை:

புழுங்கலரிசி அரை கப், கோதுமை அரை கப், பொட்டுக்கடலை அரை கப், மக்காச்சோளம் அரை கப், கேழ்வரகு அரை கப், கம்பு அரை கப்.

செய்முறை:

பொட்டுக்கடலை தவிர மீதி தானியங்களை வாசம் வர வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் கொடுத்து, ஒன்றாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். காலையில் இந்தக் கஞ்சி மாவிலிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, லேசாக வெந்நீர் விட்டுக் கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதன் நடுவே கஞ்சி மாவு கலக்கிய கிண்ணத்தை வைத்தால் போதும், மாவு வெந்துவிடும்.(வறுத்து அரைத்திருப்பதால், அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தேவையில்லை). அதில் உங்கள் விருப்பம் போல மோர், உப்பு அல்லது பால், சர்க்கரை கலந்து பருகலாம். ‘சத்துமாவுக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்தக் கலவைக் கஞ்சி, அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம்.

டூ இன் ஒன் கஞ்சி

தேவையானவை:

பார்லி அரை கப், கொள்ளு அரை கப், சுக்குப் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மோர் ஒரு கப், பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழம் அரை மூடி.

செய்முறை:

பார்லியையும் கொள்ளையும் கல் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு அப்படியே மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அந்த மாவில் 3 டீஸ்பூன் எடுத்து, வெறும் வாணலியை சூடுபடுத்தி வறுக்கவும். கருகிவிடாமல் வறுபட்டதும், அதில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்கவிடவும். (கட்டிபடாமல் இருக்க, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, பிறகு மீதித் தண்ணீரை சேர்க்கவும்). மாவு வெந்ததும் இறக்கி, உப்பு, மோர், சுக்குப்பொடி சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து அருந்தவும். எடையைக் குறைக்கக்கூடிய எளிய கஞ்சி இது.

இதிலேயே, வெந்த மாவில், ஒரு கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால், உடற்பயிற்சி போன்றவற்றால் இழந்த எடை கூடும்.
எடையைக் கூட்ட, குறைக்க என இரண்டுக்கும் பயன்படும் ‘டூ இன் ஒன்’ கஞ்சி இது.


பயத்தங்கஞ்சி

தேவையானவை:

பயத்தம்பருப்பு கால் கப், தண்ணீர் ஒரு கப், பால் அரை கப், வெல்லம் (பொடித்தது) கால் கப், ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை.

செய்முறை:

பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீர் சேர்த்து மலர வேகவைக்கவும். வெல்லத்தை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும். பிறகு அதை வடிகட்டி, பயத்தம்பருப்போடு சேர்க்கவும். அதில் பால், ஏலக்காய்தூள் சேர்த்து சாப்பிடவும். இரவு உணவுக்கு பதிலாக இந்தக் கஞ்சியை அருந்தினால், வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். விரதம் இருப்பவர்கள், இரவில் பயத்தங்கஞ்சி அருந்தினால் நல்லது.

வாழைத்தண்டு மோர் கஞ்சி

தேவையானவை:

வாழைத்தண்டு சிறிய துண்டு, மோர் ஒரு கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். அதோடு மோர், உப்பு சேர்த்து பருகினால், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெறும் வாழைத்தண்டு மோர் அருந்த விருப்பமில்லாதவர்கள், புழுங்கலரிசி நொய்க் கஞ்சியையோ, பச்சரிசி நொய்க் கஞ்சியையோ அரை கப் சேர்த்துக் கலக்கி சாப்பிடலாம்.
இன்னும் சொல்லப் போனால், இட்லி இருந் தால் அதைக் கூட சிறு துண்டுகளாக உதிர்த்து, வாழைத்தண்டு மோரில் சேர்த்து சாப்பிடலாம்.
வாழைத்தண்டுக்கு பதிலாக, வாழைப்பூவை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து, அத்துடன் மோர், உப்பு கலந்து பருகினால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

சம்பா கோதுமை கஞ்சி


தேவையானவை:

சம்பா கோதுமை மாவு 3 டீஸ்பூன், தண்ணீர் ஒரு கப், ஓமம், சுக்கு, சீரகம், மிளகு சிறிதளவு, எலுமிச்சம்பழம் அரை மூடி அல்லது கசகசா சிறிதளவு, சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் 2.

செய்முறை:

ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும். வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும்.
குழந்தைகளுக்குக் கொடுப்பதானால், சிறிது கசகசாவை வறுத்து, சிறிது சர்க்கரை, 2 ஏலக்காய் (தோல் நீக்கியது) சேர்த்து பொடிசெய்து, அதில் சில துளிகள் பால் அல்லது நெய் விட்டு, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, கோதுமைக் கஞ்சியில் மிதக்கவிட்டு கொடுக்கலாம். விரும்பிக் குடிப்பார்கள்.

ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க்

தேவையானவை:

ஜவ்வரிசி அரை கப், சர்க்கரை 2 டீஸ்பூன், பால் ஒரு கப், ஏலக்காய் சிறிது.

செய்முறை:

ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும். பிறகு மிக்ஸியில் அரைக்கவும். பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும். தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.

மசாலா பால் கஞ்சி


தேவையானவை:

பாதாம் 4, பிஸ்தா 4, அக்ரூட் 2, ஜாதிக்காய், மாசிக்காய் சேர்த்துப் பொடித்த பொடி 2 சிட்டிகை, பால் ஒரு கப், சர்க்கரை ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ 5 கீறல்.

செய்முறை:

பாலைக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, அக்ரூட் மூன்றையும் சர்க்கரை சேர்த்து, கால் கப் சூடான பாலில் ஊறவைக்கவும். சிறிது நேரத்தில் ஊறியதும், அவற்றை அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை, மீதி இருக்கும் பாலில் கலந்து, ஜாதிக்காய், மாசிக்காய் பொடி சேர்த்து அப்படியே அருந்தலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது உலர்பழங்கள், ஜெம்ஸ் போன்ற கலர் மிட்டாய்கள் போட்டுக் கொடுக்க, கண்களுக்கும் விருந்தாகும்.
பாலில் இந்த விழுதைக் கலந்து, ஆப்பம், இடியாப்பம் போன்ற பலகாரங்களின் மீது ஊற்றி சாப்பிடுவது இன்னொரு வகை.

அயல்நாடுகளில், ‘பாரிட்ஜ்’ என்று விரும்பிச் சாப்பிடும் இந்தக் கஞ்சி, கொஞ்சம் ‘காஸ்ட்லி’யானது என்றாலும், வாரம் ஒருமுறையேனும் கண்டிப்பாக அருந்த வேண்டிய கஞ்சி. இரவில் இதை அருந்தினால், நல்ல தூக்கம் வரும். மூளைக்கும் மனசுக்கும் அமைதி கிடைக்கும். சருமத்துக்கு பளபளப்பு கொடுக்கும்.

வரகரிசி கஞ்சி

தேவையானவை:

வரகரிசி கால் கப், ஓமம் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, தண்ணீர் அரை கப், மோர் ஒரு கப்.

செய்முறை:

வரகரிசியை கல் பொறுக்கி சுத்தம் செய்து, ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும். 2 விசில் வைத்தால் வெந்துவிடும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகவும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு, ஜீரணம் ஆவதற்கு உதவும் இந்தக் கஞ்சி. மஞ்சள்காமாலை போன்ற நோய் தாக்கியவர்களுக்கும் பசியே எடுக்காதவகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.

அறுசுவை நீர் கஞ்சி

தேவையானவை:

பச்சரிசி கால் கப், மாங்காய் (தோல் சீவியது) 4 துண்டுகள், வெல்லம் (பொடித்தது) 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, பச்சை வேப்பம்பூ ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாங்காய் துண்டுகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, வெந்ததும் வெல்லம், பச்சை மிளகாய், வேப்பம்பூ எல்லாம் போட்டு இறக்கிவைக்கவும். பச்சரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை உப்பு சேர்த்து, அம்மியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கட்டிபடாமல் கிளறினால் சில நிமிடங்களில் வெந்துவிடும். அத்துடன் மாங்காய், வெல்லக் கலவையைச் சேர்த்துக் கிளறினால், கஞ்சி ரெடி. புளிப்பு, இனிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு எல்லாம் சேர்ந்த இந்தக் கஞ்சி, பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் வாய்க்கு ருசியான கஞ்சி இது.

லவங்க நீர் கஞ்சி

தேவையானவை:

லவங்கம் 2 டீஸ்பூன், பால் ஒரு கப், சர்க்கரை 3 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு கப் பாலை சர்க்கரை சேர்த்து, கால் கப்பாக வற்றும் வரை காய்ச்சவும். லவங்கத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கி, மிக்ஸி அல்லது அம்மியில் வைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். இந்த விழுதைப் பாலில் சேர்த்து, ஸ்பூன் போட்டு சாப்பிடவும். லவங்கம் மணக்க, மணக்க பாஸந்தி போல இருக்கும். மழை, குளிர் காலங்களில் சாப்பிட ஏற்ற கஞ்சி.

வெந்தய கஞ்சி

தேவையானவை:

வெந்தயம் கால் கப், மோர் 1 கப், இஞ்சி (தோல் சீவியது) விரல் நீளம், பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயத்தை, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து வேகவிடவும். இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். வெந்தயம் வெந்ததும் எடுத்து, மோர், இஞ்சி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து அருந்தவும்.
நீரிழிவு, அல்சர் போன்ற நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து தரலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய காபி நல்லது. மேலே சொன்னது போல வெந்தயத்தை வேகவிட்டு, மேலே தெளிந்து நிற்கும் நீருடன் பால், சர்க்கரை சேர்த்து காபியாக பருகலாம். இதே வெந்தய நீரில் புழுங்கலரிசி ரவை அல்லது பாம்பே ரவை அல்லது சேமியா சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் சத்தான மாலை உணவு. உடம்புக்கு குளிர்ச்சி தரும்.

அங்காய கஞ்சி

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் ஒரு டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டீஸ்பூன், உலர்ந்த வேப்பம்பூ ஒரு டீஸ்பூன், சுக்கங்காய் வற்றல் ஒரு டீஸ்பூன் (இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), பச்சை கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மோர் ஒரு கப்.

செய்முறை:

எல்லா வற்றல்களையும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பச்சைக் கறிவேப்பிலையை லேசாக (கருகிவிடாமல்) சூடான வாணலியில் புரட்டி எடுத்துவிட்டு, அதையும் பெருங்காயத்தையும் வறுத்த வற்றல்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். மோரில் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கிக் குடிப்பது ஒரு வகை. ஒரு கப் வெந்நீரில், வற்றல் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கி மூடிவைத்தால், ஒரு மணி நேரத்தில் தெளிந்து நிற்கும். இந்தத் தெளிவை இறுத்து, அதில் மோர், உப்பு சேர்த்து அருந்துவது இன்னொரு வகை. வயிற்றில் பூச்சி, வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது.

தனியா ஊறல் கஞ்சி


தேவையானவை:

தனியா, மிளகு, சுக்கு தலா 10 கிராம்.

செய்முறை:

மேலே சொன்ன மூன்றையும், 2 அல்லது 3 கப் தண்ணீர் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைத்துவிடவும். தனியா, சுக்கு, மிளகு ஆகியவற்றின் சாரம் இறங்க, இறங்கத்தான் அந்த நீருக்கு அதிக சுவை கிடைக்கும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். ஒரு முறை வேகவைக்கும் சுக்கு, மிளகு, தனியாவிலேயே இரண்டு, மூன்று முறை தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாம். தெளிந்த சுக்கு நீரைக் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பாம்பே ரவையைப் போட்டு வேகவிட்டு, வெந்ததும் உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.
ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் ஆகியவர்கள் இந்தக் கஞ்சியை அடிக்கடி பருகலாம். தொண்டைக்கு இதம் தரும்.

அது சரி...இந்த சுண்டக் கஞ்சி இதுல வராதா..??

சக்க பிரதமன் 


தேவையானவை:

பலாச்சுளை & 15, வெல்லம் & ஒன்றரை கப், தேங்காய்ப்பால் & ஒன்றரை கப், ஏலக்காய் தூள் & அரை டீஸ்பூன், நெய் & 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பலாச்சுளைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, பாதியளவு நெய்யில் வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்றுசுற்றி எடுங்கள். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டி அரைத்த விழுதுடன் சேருங்கள். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சுங்கள். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, 5 நிமிடம் கழித்து தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஏலக்காய்தூள் சேருங்கள்.
கேரளத்தின் மிக பிரபலபான இந்த இனிப்பு, சுவையிலும் முதல் தரமானது. ‘சக்க பிரதமன்’ இல்லாத விசேஷமே அங்கு இல்லை.

இஞ்சி புளி 


தேவையானவை:

இஞ்சி 100 கிராம், புளி பெரிய எலுமிச்சையளவு, பச்சை மிளகாய் 8, உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், வெல்லம் 2 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் கால் கப்.

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டு களாக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து மிளகாய், இஞ்சி சேருங்கள். நன்கு சுருள வதக்குங்கள். பின்னர் புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்குங்கள்.
புளிப்பு, இனிப்பு, காரம் சேர்ந்த இந்த கேரள ஸ்பெஷலை ஒரு வாரம் வரையிலும் கூட வைத்திருந்து சாப்பிடலாம். காலை, மதியம் என எல்லா நேர உணவுகளுக்கும் ஏற்ற சூப்பர் சைட் டிஷ்.

ஓரின்- மள்ளு ஸ்பெஷல் 


தேவையானவை:

பூசணி பத்தை 1, பச்சை மிளகாய் 4, தேங்காய்ப்பால் 3 கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

பூசணியை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிளகாயை கீறிக்கொள்ளுங்கள். காராமணியை வாசனை வரும் வரை வறுத்து வேக விடுங்கள். பாதியளவு தேங்காய்ப்பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பூசணி, வேகவைத்த காராமணி, மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். காய் நன்கு வெந்ததும் மீதமுள்ள பாலை விட்டு, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து மூடுங்கள்.

தேங்காய்ப்பால் மணக்கும் இந்தக் கூட்டு, வயிற்றுக்கும் வாய்க்கும் இதமானது. தேவையானவை: கோதுமை மாவு 2 கப், உப்பு அரை டீஸ்பூன், தனி மிளகாய்தூள் அரை டீஸ்பூன், தனியா தூள் கால் டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை கொத்துமல்லி சிறிதளவு.

கார சப்பாத்தி 


தேவையானவை:

கோதுமை மாவு & 2 கப், உப்பு & அரை டீஸ்பூன், தனி மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், தனியா தூள் & கால் டீஸ்பூன், நெய் & 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை கொத்துமல்லி & சிறிதளவு.

செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், நெய், நறுக்கிய கொத்துமல்லி எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்கவும். அதில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும். சாதாரணமானவர்களை விட, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிற்றுண்டி இது. பயணம் செய்யும்போது அவர்களுக்கு வழியில் அடிக்கடி பசியெடுக்கும். அப்போது, இந்த சப்பாத்தியைச் சாப்பிட்டுப் பசியாறலாம். & என்.பத்மா, ஸ்ரீரங்கம்.

பிக்னிக் மிக்சர் 


தேவையானவை:

ஜவ்வரிசி 2 கப், அவல் அரை கப், பொட்டுக்கடலை அரை கப், நிலக்கடலை அரை கப், முந்திரிப்பருப்பு 15, உலர் திராட்சை 10, கறிவேப்பிலை சிறிது, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க.

செய்முறை:

ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவலையும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். முந்திரிப்பருப்பு, உலர் திராட்சையை எண்ணெயில் பொரித்து, கறிவேப்பிலையையும் பொரித்துக்கொள்ளவும். நிலக்கடலை, பொட்டுக்கடலையை வெறும் சூடான வாணலியில் போட்டு, சூடு வரும்வரை கிளறி எடுக்கவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மிளகாய்தூள் போட்டுக் கலந்துவைத்தால் சுவையான ‘பிக்னிக் மிக்சர்’ ரெடி. பாலித்தீன் பையில் பேக் செய்து, எடுத்துச் செல்லலாம். பசிக்கும்போது கொறிக்கலாம்.

புதினா சாதம் 


தேவையானவை:

பச்சரிசி 2 கப், புதினா அரை கப், பச்சை கொத்துமல்லி அரை கப், புளி கொட்டைப் பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் 5, நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.


செய்முறை:

முதலில் அரிசியை உதிர் உதிராக சாதமாக வடிக்கவும். பின்னர், புதினா, கொத்துமல்லி, புளி, மிளகாய், உப்பு எல்லா வற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து அரைத்த மசாலா வைப் போட்டு நன் றாக கையில் ஒட்டும் பக்குவத்தில் கிளறி இறக்க வும். இதுதான் ‘மின்ட் பாத்’துக்கான மசாலா. சாதத்தை ஆறவைத்து, வதக்கி வைத்திருக்கும் மசாலாவைப் போட்டுக் கிளறி பேக் செய்ய வேண்டியதுதான். பயணத்துக்கும் வயிற்றுக்கும் ஏற்ற கலவை சாதம் இது. சீக்கிரமாகவும் செய்யலாம்.

மாம்பழ ஜெல்லி 



தேவையானவை:

மாம்பழக் கூழ் 2 கப், சர்க்கரை 1 கப், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

நல்ல கனிந்த மாம்பழங்களை தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு மாம்பழக் கூழ் தயாரிக்கவும். ஒரு அடி கனமான வாணலியில் இந்த மாம்பழக் கலவையை போட்டு அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அது சற்று கெட்டியானதும் சர்க்கரையை அதில் சேர்க்க வேண்டும். பின் மீண்டும் கிளற வேண்டும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் நெய்யை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். வித்தியாசமாக செய்ய விரும்புவோர் பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை சீவி போட்டு கிளறி, துண்டுகள் போடலாம். செய்ய எளிது சுவைக்க இனிது.

This page is powered by Blogger. Isn't yours?